×

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் 24 தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது. ஜம்மு – காஷ்மீரில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 74 பொதுத் தொகுதிகள், பட்டியல் பிரிவினருக்கான தனித்தொகுதி 7, பட்டியல் – பழங்குடிகளுக்கானது 9. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதி வுக்கான மனு தாக்கல் ஆக. 20ம் தேதி தொடங்கியது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் வரும் 18ம் தேதி (நாளை மறுநாள்) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனால் இன்று மாலையுடன் ேதர்தல் பிரசாரம் ஓய்கிறது.

முதல் கட்ட தேர்தலில் சுமார் 23 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த உள்ளனர். தேர்தல் ஆணையம் 125 வாக்குச்சாவடிகளை அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறது. பாஜக, காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மக்களவை எம்பியான இன்ஜினியர் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளனர். முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், உள்துறை அமைச்சர் அமித் ஷா, செனாப் பள்ளத்தாக்கில் மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

The post ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,24th ,Kashmir ,Jammu ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.