வாஷிங்டன்: சமூக ஊடகங்களில் ஆளாளுக்கு ரீல்ஸ் போடும் இந்த காலத்தில் வாழ்க்கையே ரீல் ஆகி விட்டது. எதுவும் உண்மை இல்லை. இதற்கு சான்றாக அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நியூயார்க்கின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான பிரண்டன் மில்லர் கடந்த மாதம் 3ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி கேண்டேசும், மில்லரும் சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பவர்கள்.
சொகுசு பங்களா, சொகுசு காரில் வலம் வந்து பகட்டான வாழ்க்கை வாழ்வதாக வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான இவர்களின் நிஜ பின்னணி கொடூரமாக இருந்துள்ளது. மில்லர் தற்கொலை செய்யும் போது அவருக்கு ரூ.280 கோடி கடன் இருந்திருக்கிறது. வங்கியில் வெறும் ரூ.6 லட்சம் மட்டுமே வைத்திருக்கிறார். அவரது சொத்துக்கள் எல்லாமே வங்கி அடமானத்தில் இருந்ததால் கடன் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். இந்த ரகசிய கடன் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்போது மில்லரின் மனைவி கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.
The post சொகுசு பங்களா, கார், பகட்டான வாழ்க்கை என்று சமூக ஊடகங்களில் ரீல் விட்ட தொழில் அதிபர் தற்கொலை: வங்கியில் ரூ.280 கோடி கடன் இருந்தது அம்பலம் appeared first on Dinakaran.