×
Saravana Stores

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகிர் கான் நியமனம்!

லக்னோ: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகிர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளர்களாக இருந்த கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் இந்திய அணியின் பயிரியலர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் ஜாகிர் கான் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஐபிஎல் அணிகள் பல மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகிர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது லக்னோ அணிக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் தற்போது ஜாகிர் கான் ஆலோசகராக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய அணிகளுக்காக 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் ஜாகீர் கான் இந்திய அணிக்காக, 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஜாகீர் கான் கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகிர் கான் நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Jagir Khan ,Lucknow Super Giants ,Lucknow ,IPL ,Gambir ,Morne Morgal ,Jagir ,Dinakaran ,
× RELATED உ.பி அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி...