×
Saravana Stores

உ.பி அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி நடிகை திஷா பதானியின் தந்தையிடம் ரூ25 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற டிஎஸ்பிக்கு ஏற்பட்ட பரிதாபம்


லக்னோ: உ.பி அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி நடிகை திஷா பதானியின் தந்தையிடம் ரூ25 லட்சம் மோசடி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை திஷா பதானியின் தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் டிஎஸ்பி ஜகதீஷ் சிங் பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வருகிறார். அவரிடம் ஷிவேந்திர பிரதாப் சிங் என்பவர் அணுகினார். தனக்கு மாநில அரசின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை தெரியும் என்றும், தனக்கு அரசியல் ெசல்வாக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநில அரசில் உயர் பதவியை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.

இதற்காக ரூ.25 லட்சம் கொடுத்தால் ஆணைய தலைவர் பதவி வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய ஜகதீஸ் சிங் பதானி, ஷிவேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான திவாகர் கார்க், ஆச்சார்யா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேரிடம் 25 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். அதாவது 5 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும், 20 லட்சம் ரூபாயை மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளின் மூலம் கொடுத்துள்ளார். மூன்று மாதங்களாகியும், அவருக்கு எந்தப் பதவியும் வாங்கித் தராததால் அதிர்ச்சியடைந்த ஜகதீஷ் சிங் பதானி, மேற்கண்ட நான்கு பேரையும் ெதாடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர்கள் வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக கூறினார். ஆனாலும் பணத்தை திருப்பி தரவில்லை. மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பிக் கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர், லக்னோ போலீசில் புகார் அளித்தார். அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட ஷிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கார்க், ஜூனா அகாராவைச் சேர்ந்த ஆச்சார்யா ஜெயப்பிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் மீது மோசடி, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் எப்ஐ ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post உ.பி அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி நடிகை திஷா பதானியின் தந்தையிடம் ரூ25 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற டிஎஸ்பிக்கு ஏற்பட்ட பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Disha Patani ,UP government ,DSP ,Lucknow ,Bollywood ,Jagdish Singh ,Dinakaran ,
× RELATED கங்குவா – திரை விமர்சனம்