×

திருப்பதி, திருமலையில் விழாக்கோலம் பூண்டது கோகுலாஷ்டமி கோலாகல கொண்டாட்டம்

*சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் வழிபாடு

திருமலை : திருப்பதி, திருமலையில் கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜைகள் பக்தர்கள் வழிபட்டு சென்றனர். திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பசு பாதுகாப்பு அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் கோசாலையில் கோகுலாஷ்டமி நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கிருஷ்ணனை மன முருக வழிபட்டனர். மேலும் கோகுலாஷ்டமியையொட்டி கோலாட்டம், புராணகதை நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் திருமலை கோகர்பம் அணை எதிரே உள்ள காலிங்க நர்தன கிருஷ்ணருக்கு தோட்டத்துறை சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீ பத்மாவதி மகளிர் ஜூனியர் கல்லூரி மாணவிகளின் நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் நடந்தது. கோகுலாஷ்டமி விழாவில் பங்கேற்ற செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பேசியதாவது: இந்திய கலாச்சாரத்தில் பசுவுக்கு முக்கிய இடம் உண்டு.

பசுவை இந்துக்கள் கோமாதா என்று வழிபடுகிறார்கள், இதனால் பால், பயிர்கள் செயித்து வளர்ந்து நாடு பசுமையாக இருக்கும். வேதங்கள் மற்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளதின்படி அனைத்து தெய்வங்களையும் செரூபமாக விளங்கும் பசுக்களை பாதுகாக்கவும், சனாதன இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும்.கோசாலையில் உள்ள கால்நடைத் தொழுவத்தில் வைக்கப்பட்டுள்ள வெல்லம், அரிசி மற்றும் தீவனங்களை பக்தர்கள் தாங்களாகவே கால்நடைகளுக்கு அளிக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது என்றார்.

பின்னர் திருப்பதி எம்எல்ஏ சீனிவாசலு பேசியதாவது: பசுவின் மகத்துவத்தை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் தேவஸ்தானம் கோபூஜை நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த வேண்டும். கோசாலையில் கோகுலாஷ்டமி கோபூஜை மிகவும் முக்கியமானது. பசுவை வழிபடுவதன் மூலம் உலகம் முழுவதும் கால்நடை தொழில் பால் வளம், பயிர்கள் பெருகும் என்றார்.

முன்னதாக இ.ஒ. தம்பதியினர் பசு பூஜை செய்தனர். பின்னர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, எஸ்.வி.வேதப்பள்ளி சார்பில் வேத பாராயாணம், பள்ளி மாணவ, மாணவியரின் புல்லாங்குழல், பஜனை, கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பின்னர் பத்மாவதி மகளிர் ஜுனியர் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன. மாலையில் இந்து தர்மபிரசார பரிஷத் கலைஞர்களுடன் ஹரிகதை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், ஜெ.இ.ஒ. கௌதமி, சி.வி.எஸ்.ஒ. ஸ்ரீதர், கோசாலை மேலாளர் டாக்டர் கே.ஹரநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உறியடி உற்சவம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி திருமலையில் உள்ள கோகர்பம் அனை எதிரே இருக்கும் காலிங்க நர்த்தன பூங்காவில் இருக்கும் காலிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு தோட்டத் துறையின் சார்பில் பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் நடந்த உறியடி திருவிழாவில் இளைஞர்கள் பங்கேற்று உறியடித்து பரிசுப் பொருட்களை பெற்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் இந்நிகழ்ச்சியில் தோட்டத் துறை இணை இயக்குநர் சீனிவாசலு, அலுவலர்கள் மற்றும் தோட்டப் பணியாளர்கள் உள்ளூர் இளைஞர்கள் பங்கேற்றனர்.

The post திருப்பதி, திருமலையில் விழாக்கோலம் பூண்டது கோகுலாஷ்டமி கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Gokulashtami Kolagala Celebration ,Tirupati ,Tirumala ,Gokulashtami ,Gosala ,Srivenkateswara Cow Protection Trust ,
× RELATED கொரோனா காலக்கட்டத்தில்...