- காங்கிரஸ்
- காஷ்மீர்
- காஷ்மீர் சட்டமன்றம்
- இந்தியா
- தலைமை செய்தி தொடர்பாளர்
- பவன் க்ஹீரா
- ஜனாதிபதி
- தாரிக் ஹமீத் கர்ரா
- தின மலர்
நகர்: காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நாளை முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அகில இந்திய தலைமை செய்தி தொடர்பாளர் பவன் கேரா, காஷ்மீர் மாநில தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோர் கட்சி அலுவலகத்தில் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:
* இயற்கை பேரிடர்களுக்கு எதிரான அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு மற்றும் ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) ரூ.72.
* நிலமற்ற, குத்தகைதாரர் மற்றும் நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். அரசு நிலத்தில் பயிரிடும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டு குத்தகை வழங்கப்படும்.
* காஷ்மீர் விவசாயிகளுக்கு 100 சதவீத நீர்ப்பாசனத்தை உறுதி செய்வதற்காக அனைத்து மாவட்ட அளவிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கும் ரூ.2,500 கோடி நிதி வழங்கப்படும்.
* காஷ்மீரில் படித்த இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதம் ரூ.3,500 வரை வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும்.
* 30 நாட்களுக்குள் காலியாக உள்ள ஒரு லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேலையற்ற பொறியாளர் குழுக்களுக்கு 30 சதவீத கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதற்கான திட்டம் உருவாக்கப்படும்.
* குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவி வழங்குவோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post 30 நாளில் 1 லட்சம் அரசு வேலை: படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.3500.! காஷ்மீரில் காங்கிரஸ் வாக்குறுதி appeared first on Dinakaran.