புதுடெல்லி: தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் பாஜவை தோற்கடிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில்,‘‘கச்சா எண்ணெய் விலை ரூ.32.5சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பாஜ அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது. பாஜவின் எரிபொருள் கொள்ளை தொடர்கிறது. தேர்தல் நடக்கும் மாநிலங்கள் பாஜவை தோற்கடித்து மோடியால் உருவாக்கப்பட்ட இந்த விலைவாசி உயர்வை நிராகரிக்கும்.
2014ம் ஆண்டு மே 16ம் தேதி (டெல்லி)- கச்சா எண்ணெய் பேரலுக்கு 107.49 அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோல் விலை ரூ.71.51, டீசல் விலை ரூ.57.28ஆக இருந்தது. 2024 செப்டம்பர் 16ம் தேதி கச்சா எண்ணெய் பேரலுக்கு 72.48அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை ரூ.94.72 மற்றும் டீசல் விலை ரூ.87.62 ஆக உள்ளது. தற்போதைய கச்சா எண்ணெய் விலையின்படி பெட்ரோல் விலை ரூ.48.27ஆகவும் டீசல் விலை ரூ.69ஆகவும் இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் மற்றும் 100 நாட்களில் மோடி அரசானது எரிபொருளுக்கு வரி விதித்து ரூ.35லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தேர்தல் நடக்கும் மாநிலங்கள் பாஜவை தோற்கடிக்கும்: காங். தலைவர் கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.