×
Saravana Stores

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.24 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். 3 பேரையும் 10 நாள் காவலில் விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கோரினர். செப்டம்பர் 3ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். தேவநாதன் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக மொத்தம் 27 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் 18 வங்கி கணக்குகள், குணசீலன் மற்றும் மகிமைநாதனின் தலா 2 வங்கிக் கணக்குகள் என மொத்தம் 27 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

மேலும், ஏற்கனவே நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

தற்போது அடையாறு, வண்ணாரப்பேட்டை ,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ என்ற நிதி நிறுவனத்தில் 525 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தேவநாதன் கைது திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை கொண்டு வரப்பட்ட அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரின் 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் காவல்துறை தரப்பில் மேலும் 3 பேரையும் 10 நாள் காவலில் விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கோரினர். வழக்கை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

 

 

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Devanathan ,Madras ,CHENNAI ,Economic Offenses Division ,Mylapore ,Mylapore financial ,Dinakaran ,
× RELATED தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!