பலுசிஸ்தான்: பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட மிகப்பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் அவ்வப்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்ட நெடுஞ்சாலை வழியாக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்தை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்தது. அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அந்த கும்பல், பேருந்துக்குள் இருந்த பயணிகளை கீழே இறங்கி வர வற்புறுத்தியது. அதன்படி பயணிகளும் கீழே இறங்கி வந்தனர். திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பலரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.
ஆனால் இந்த சம்பவத்தில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த பயணிகள் அனைவரும் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அவ்வழியாக சென்ற 10 வாகனங்களுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீவிரவாதச் சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 பயணிகள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.