- புதிய இந்திய எழுத்தறிவு மண்டலம்
- கோவா, ஆகா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புது இந்திய கல்வியறிவு மண்டல
- தின மலர்
கோவை, ஆக. 26: தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் எழுத்தறிவு கல்வி பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் படிக்காதவர்கள் கண்டறிந்து அவர்களை அருகில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் உள்ள கற்போர் எழுத்தறிவு மையங்களில் சேர்த்து, 200 மணி நேரம் கற்பித்தல், கற்றல் செயல்பாடுகள் தன்னார்வலர்கள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநில அளவில் எழுத்தறிவு கொண்டாட்டம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட 9 மண்டல அளவில் இரண்டு நாட்கள் எழுத்தறிவு கொண்டாட்டம் நடக்கிறது. இதில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வரும் செப்டம்பர் 18,19-ம் தேதி நடக்கிறது. இதில், ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, கோலப்போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், பாரம்பரிய உணவு தயாரித்தல் போட்டிகள், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.
The post புதிய பாரத எழுத்தறிவு மண்டல கூட்டம் appeared first on Dinakaran.