- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- பிரமோத்சவம்
- திருமலா
- திருப்பதி தேவஸ்தானம்
- திருப்பதி ஏசுமலையான் கோவில்
- பிரம்மோத்சவம்
- சுவாமி
திருமலை: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் போது சுவாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் வருவார்கள். எனவே, அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை பல ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 3ம் தேதி (அங்குரார்ப்பணம்) முதல் 12ம் தேதி வரை (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வரை) தினமும் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் விஐபி தரிசனத்தை அதிகாரி பதவியில் உள்ள புரோட்டோகால் உயரதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
The post அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து appeared first on Dinakaran.