×

1510 மூட்டை பருத்தி ₹38லட்சத்திற்கு ஏலம்

மல்லசமுத்திரம், ஆக.22: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 1510 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தியை ஏலம் எடுக்க சேலம், அவிநாசி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், பி.டி ரகம் குவிண்டால் ₹6980 முதல் ₹7800 வரையிலும், சுரபி ரகம் ₹8380 முதல் ₹8579 வரையிலும், கொட்டு பருத்தி ₹3890 முதல் ₹5030 வரையிலும் என மொத்தம் ₹38லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 28ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 1510 மூட்டை பருத்தி ₹38லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Tiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED ₹8.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம்