- 26ஆம் வார்டு
- கவுன்சிலர்
- கோயம்புத்தூர்
- 26வது
- வார்டு கவுன்சிலர்
- சித்ரா வெள்ளிங்கிரி
- மதிமுக
- மேயர்
- ரங்கநாயக்கா
- பாலகுரு கார்டன்
- 26வது வார்டு கவுன்சிலர்
- தின மலர்
கோவை, ஆக. 21: கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகியிடம், 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி (மதிமுக) நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 26வது வார்டுக்கு உட்பட்ட பாலகுரு கார்டன் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பாதை அமைக்க பூஜை போடப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை பணிகள் துவங்கவில்லை. இதேபோல், ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் பாதை ஒப்பந்தம் கோரப்பட்டு நிலுவையில் உள்ளது.
வீடற்றோருக்கான விடுதி கட்ட பூமி பூஜை போடப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. செங்காளியப்பன் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டு 9 மாதத்திற்கும் மேலாக அறைகுறையாக கிடக்கிறது. இப்பகுதி மக்கள் கீழே விழுந்து கை, கால்களை உடைத்துக்கொள்ளும் நிலை உள்ளது. சூயஸ் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு பல வீடுகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. ஆகவே, வார்டு மக்களின் நலன் கருதி மேற்கண்ட பணிகளை விரைந்து முடித்து தரும்படி வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
The post மேயரிடம் 26-வது வார்டு கவுன்சிலர் மனு குடிநீர் இணைப்பு விரைவாக வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.