×
Saravana Stores

உலக கல்வி தரவரிசை பட்டியலில் நாட்டில் 2வது சிறந்த பல்கலைக்கழகமாக விஐடி தேர்வு

சென்னை: உலகளவில் கல்வி தரவரிசை பட்டியலை சாங்காய் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்தில் உலகளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அளவில் விஐடி பல்கலைக்கழகம் 2ம் இடம் பிடித்துள்ளது. அதே போல் தனியார் பல்கலைகழகங்களில் இந்திய அளவில் விஐடி முதல் இடம் பிடித்துள்ளது. உலகளவில் உள்ள பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் விஐடி 501லிருந்து 600க்குள் இடம் பிடித்துள்ளது.

கல்வி, ஆராய்ச்சின் செயல்பாடு, முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நோபல் விருது பெற்றவர்கள், தலை சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சிறந்த இதழில் வெளியிடுதல், சிறந்த ஆராய்ச்சிகள் வெளிவருதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சாங்காய் கல்வி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

சாங்காய் கல்வி தரவரிசை பட்டியல் உலகளவில் தலை சிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 15 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் உலகளவில் 401 முதல் 500 இடங்களுக்குள் பிடித்துள்ளது. அதிலும் இந்தியளவில் முதல் இடம் பிடித்துள்ளது.

The post உலக கல்வி தரவரிசை பட்டியலில் நாட்டில் 2வது சிறந்த பல்கலைக்கழகமாக விஐடி தேர்வு appeared first on Dinakaran.

Tags : VIT ,Chennai ,Sangai ,VIT University ,India ,Dinakaran ,
× RELATED நான் எம்பி ஆவதற்கு பக்கபலமாக...