×

கிரிக்கெட் விளையாட்டு கதையில் ஹரீஷ் கல்யாண்

சென்னை: சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’, விஷ்ணு விஷால் நடித்த ‘எப்ஐஆர்’ ஆகிய படங் களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர், தமிழரசன் பச்சமுத்து. பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதினார். இந்நிலையில், அவர் இயக்குனராகும் படத்துக்கு ‘லப்பர் பந்து’ என்று பெயரிட்டு இருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இரு ஹீரோக்களாக ஹரீஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கின்றனர். இரு ஹீரோயின்களாக சுவாசிகா விஜய், ‘வதந்தி’ சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் தேவதர்ஷினி, பாலசரவணன் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது.

கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி யதார்த்தமான காட்சிகளுடன் உருவாக்கப்படும் இப்படம், தனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்று, ஹீரோக் களில் ஒருவரான ஹரீஷ் கல்யாண் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: சசி இயக்கத்தில் நான் நடித்த ‘நூறு கோடி வானவில்’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இதில் எனது ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். அடுத்து சண்முகம் முத்துசாமி இயக்கும் ‘டீசல்’ படத்தில் நடித்து வருகிறேன். இதில் எனக்கு அதுல்யா ஜோடியாக நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் டோனி தமிழில் தயாரிக்கும் முதல் படம், ‘எல்ஜிஎம்’. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இதில் எனது ஜோடியாக இவானா நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிப்பதற்காக கதை கேட்டுள்ளேன். மற்ற மொழிகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகிறது.

The post கிரிக்கெட் விளையாட்டு கதையில் ஹரீஷ் கல்யாண் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Harish Kalyan ,Chennai ,Tamilarasan Pachamuthu ,Sathyaraj ,Aishwarya Rajesh ,Sivakarthikeyan ,Vishnu Vishal ,Udayanidhi Stalin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...