×

வகுப்புவாத சிவில் சட்டம் என்று விமர்சனம் மோடியின் பேச்சால் அம்பேத்கருக்கு அவமதிப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: சுதந்திர தின உரையின் போது வகுப்புவாத சிவில் சட்டம் என்ற மோடியின் பேச்சு அம்பேத்கருக்கு ஏற்பட்ட அவமதிப்பதாகும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சுதந்திர தினத்ன்று உரையாற்றிய பிரதமர் மோடி,மதம் சார்ந்த சிவில் சட்டத்துடன் 75 ஆண்டுகள் வாழ்ந்து விட்டோம். சிவில் சட்டம் மக்களிடையே பாரபட்சத்தை காட்டுகிறது. எனவே, மதசார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார்.மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிடுகையில்,சுதந்திர தின உரை ஆற்றிய பிரதமர் மோடி மதம் சார்ந்த சிவில் சட்டம் என்று கூறியது அம்பேத்கரை அவமதிப்பதாகும். இதில் மோடி தவறான தகவல்களை தருகிறார். 1950-களின் நடுப்பகுதியில் இந்து தனிநபர் சட்டங்களில் மிக பெரிய வெற்றியை கண்டவர் அம்பேத்கர். ஆனால் இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரும்பாலான நாடுகள் வேறுபாடுகளை அங்கீகரிப்பதை நோக்கி நகர்கின்றன. வேறுபாடுகள் இருப்பது பாகுபாட்டை குறிக்காது. இது ஒரு வலுவான ஜனநாயகத்தை குறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா, சுதந்திர தின உரையில் மோடி ஆற்றிய உரை நாட்டை பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்சின் செயல் திட்டத்துடன் ஒத்து போகிறது என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா,மிக முக்கியமான மற்றும் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால், 11வது முறையாக சுதந்திர தின உரையாற்றும்போதும், தான் பிரதமர் என்பதை புரிந்து கொள்ள மோடி தவறிவிட்டார். எதிர்க்கட்சிகளுக்கோ அல்லது உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கோ தனி பிரதமர் என்று யாரும் கிடையாது. மதச்சார்பின்மை என்பது ஒரு செயல்முறை, அதை உள்வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வகுப்புவாத சிவில் சட்டம் என்று விமர்சனம் மோடியின் பேச்சால் அம்பேத்கருக்கு அவமதிப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Ambedkar ,New Delhi ,Independence Day ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் பா.ஜ உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி