திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதேபோல், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
நவம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனம் ரூ. 300 டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பர் மாதத்திற்கான அறைகள் அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர் திட்டத்தில் நவம்பர் மாதம் சேவை செய்ய 27 ம் தேதி காலை 11 மணிக்கும், ஏழுமலையானுக்கு வெண்ணைய் தயார் செய்யும் நவநீத சேவைக்கு 12 மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவைக்கு 1 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
The post திருப்பதி கோயிலில் நவம்பர் மாத டிக்கெட் கோட்டா வெளியிடும் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.