×

திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

திண்டுக்கல், ஆக. 13: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர்கள் மாலதி, துரைராஜ், செல்வி, பிரபாவதி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாத்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுந்தரி கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர் சுகந்தி, சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகி ராஜமாணிக்கம், பல்வேறு சங்க நிர்வாகிகள் முருகானந்தம், மகாலிங்கம், விஜயகுமார் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொது செயலாளர் மலர்விழி சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியிட இடமாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் ஜோதியம்மாள் நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Dindigul ,Dindigul Collector ,Tamil Nadu Sathunavu Staff Association ,Ramu ,Malathi ,Durairaj ,Selvi ,Prabhavathy ,
× RELATED திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்...