×

திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.21.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

திண்டுக்கல், டிச .17: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 218 மனுக்களை பெற்றார். தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 3 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கடனுதவி, தொழிலாளர் நலவாரியம் சார்பில் விபத்து மரண உதவித்தொகையாக 7 பேருக்கு ரூ.17.25 லட்சம், 9 பேருக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.1.80 லட்சம் மற்றும் கலெக்டரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து ஒருவருக்கு ரூ.7,000 மதிப்பிலான தையல் இயந்திரம் என மொத்தம் 20 பேருக்கு ரூ.21.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் கலெக்டர் மாவட்ட, ஒன்றிய அளவில் தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.5,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000 பரிசுத்தொகை மற்றும் விருதுகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி, திண்டுக்கல் ஆவின் பொது மேலாளர் வாணீஸ்வரி, பால்வளம் துணை பதிவாளர் பவனந்தி, உதவி பொது மேலாளர் பாபு மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.21.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal Meeting ,Dindigul ,People's Grievance Redressal Day Meeting ,Dindigul Collector ,Office ,Collector ,Poongodi ,Dinakaran ,
× RELATED அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்