×
Saravana Stores

அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர் மர்மச்சாவு

திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த வளாகத்திலேயே மாணவர்களுக்கு விடுதியும் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் சகமாணவர்களுடன் உணவு அருந்திவிட்டு தூங்குவதற்காக தனது அறைக்கு 4ம் ஆண்டு மாணவரான சீர்காழி தாலுகா சட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சக்தி (22) சென்று விட்டார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் சக்தி வெளியே வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தான் படுத்திருந்த கட்டிலிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Government Medical College ,Tiruvarur ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி...