டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்ரவரி 26, 2023 முதல் மணீஷ் சிசோடியா சிறையில் இருந்து வருகிறார். சிபிஐ கைதுசெய்ததை தொடர்ந்து 2023 மார்ச் 9-ம் தேதி அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைதுசெய்தது.
தற்போது பீகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள அவரது ஜாமின் மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.பி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு கடந்த 6ம் தேதி விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து. இந்த வழக்கின் விசாரணையில் இன்று கூறிய தீர்ப்பில், இந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் விசாரித்து அவரது ஜாமின் மனுவை நிராகரித்து. இந்த வழக்கின் விசாரணையை 7 அல்லது 8 மாதங்களுக்குள் நிறைவு செய்ய உத்தரவை பிறப்பித்திருந்தது. அந்த காலக்கெடுவும் தற்போது நிறைவடைத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு கோருவதற்கு மனுதாரருக்கு உரிமை உள்ளது.
எனவே மனுதாரரை நீண்ட நாட்கள் சிறையில் வைக்க முடியாது அது தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு நிறைவடைந்துவிட்டது. அவரை இன்னும் சிறையில் வைப்பதற்கு அவசியம் இல்லை என்றும் அவரது சாட்சிகளை, ஆதாரங்களை கலைக்கக்கூடிய நபர் இல்லை என்றும் வெளிநாட்டிற்கு தப்பி செல்லக்கூடிய நபர் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
சிசோடியா கட்சி அலுவலகம், தலைமைச் செயலகம் செல்ல ஆனுமதிக்கக் கூடாது என்ற EDன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணை சரியான நேரத்தில் முடிய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து. ரூ.10 லட்சம் ரொக்கம், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும். விசாரணை அதிகாரியை ஒவ்வொரு திங்கள் கிழமையும் தொடர்புகொள்ள வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சிக்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.
The post டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.