- ஜெகதீப் தங்கர்
- போகா
- ராஜ்ய சபா
- புது தில்லி
- காங்கிரஸ்
- மல்லிகார்ஜுனா கார்கே
- ஒலிம்பிக்
- வினேஷ் போகா
- ராஜ்ய
- சபா
- தின மலர்
புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த வீராங்கனை போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரச்னை குறித்து பேச முயன்றார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
ஆனால் இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு கார்கேவை அவை தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை. இதனிடையே திரிணாமுல் கட்சியின் எம்பி டெரக் ஓ பிரையனும் பேச முயன்றதால், பொறுமையிழந்த அவை தலைவர் ஜெகதீப் தன்கர், நீங்கள் தலைவர் இருக்கையை நோக்கி கத்துகிறீர்கள். அவையில் உங்களின் நடத்தை அழகற்றது. உங்கள் நடவடிக்கையை கண்டிக்கிறேன்.
அடுத்த முறை இதுபோன்று நடந்து கொண்டால் உங்களை அவையில் இருந்து வெளியேற்றி விடுவேன்என்று எச்சரித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சி உறுப்பினர்களின் நடத்தை குறித்து வேதனை தெரிவித்த தலைவர் ஜெகதீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார்.
The post போகத் தகுதி நீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியால் வெளியேறினார் ஜெகதீப் தன்கர்: மாநிலங்களவையில் பரபரப்பு appeared first on Dinakaran.