×

காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காசநோய் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூயியிருப்பதாவது:-
2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அங்கீகரித்துள்ளது. உலகளவில் காசநோய் பாதிப்பு 8.3 சதவீதம் வரை சரிந்துள்ளது. இந்த நிலையாவில் சர்வதேச அளவை விட இருமடங்கு வரை காசநோய் பாதிப்பு சரிவடைந்து இருக்கிறது. காசநோய் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான இந்தியாவின் அணுகுமுறையை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது. காசநோயாளிகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆதரவை வழங்க நி-க்ஷய் போஷன் யோஜனா மற்றும் பல மருந்து எதிர்ப்பு காசநோய்க்கான புதிய சிகிச்சை விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல் போன்ற முக்கிய முயற்சிகளை எடுத்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது. காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் முக்கியப் பங்காற்றுகின்றன என தெரிவித்திருந்தார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்:
அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது பாராட்டுக்குரிய முன்னேற்றம்; கூட்டு உணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

The post காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,New Delhi ,Union Minister of Health ,
× RELATED இந்திய பாதிரியார் கார்டினலாக நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து