×
Saravana Stores

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு கோரி வழக்கு 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்: விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்குமாறு விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்குமாறு விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவிடக் கோரி உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், இலங்கை, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்குவதில்லை என்று வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்க கோரி மனுதாரர் அறக்கட்டளை அளித்த விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

The post உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு கோரி வழக்கு 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்: விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Chennai High Court ,Civil Aviation Department ,Ministry of Civil Aviation ,
× RELATED புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!!