பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரி கிராமத்தில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தநிலையில்,கோயிலில் தினமும் 100 பேருக்கும் விழா நாட்களில் 500பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் கோயில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அன்னதானத்துக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குவதற்காக இ- உண்டியல் சேவை க்யூஆர் குறியீடு சேவையை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் செலுத்தும் பணம் ஆலய வங்கியின் கணக்குக்கு நேரடியாக சென்றுவிடும். இந்த திட்டம் நேற்று ஆடி கிருத்திகை முன்னிட்டு துவங்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் கார்த்திகேயன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலூர் மண்டல மேலாளர் ராஜசேகர், ஆரணி இந்தியன் ஓவர்சீஸ் கிளை மேலாளர் நரசிம்மஹா ராவ், பெரியபாளையம் கிளை மேலாளர் வெங்கடேஸ்வரலு மற்றும் சிறுவாபுரி ஆலய தலைமை குருக்கள் ஆனந்தன் ஆகியோர் இ- உண்டியல் சேவையை துவக்கி வைத்தனர். இதையடுத்து பக்தர்கள் பலர் க்யூ ஆர் குறியீடு மூலம் நன்கொடை செலுத்தி வருகின்றனர்.
The post சிறுவாபுரி முருகன் கோயிலில் க்யூஆர் கோடு மூலம் பக்தர்களிடம் நன்கொடை வசூல் திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.