×

பந்தலூர் கடைவீதியில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரிப்பு

 

பந்தலூர், ஜூலை 30: பந்தலூர் பஜார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம், பந்தலூர் பஜார் மற்றும் காலனி சாலை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, மாடு, தெருநாய்கள் உள்ளிட்ட கால்நடைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்னால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், கால்நடைகளை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெல்லியாளம் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், எந்தவித பயனும் இல்லாமல் உள்ளது. தொடர்ந்து, கால்நடைகள் பஜார் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முற்றுகையிட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் கடைவீதியில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Bandalur ,Bandalur bazaar ,Nilgiri district ,
× RELATED விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வலியுறுத்தல்