×

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு ₹4 லட்சம் வெள்ளி குடை காணிக்கை

திருப்போரூர், ஜூலை 27: திருப்போரூர் முருகன் கோயிலுக்கு, சென்னை பக்தர் ₹4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி குடையினை காணிக்கையாக வழங்கினார். திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த வெங்கட் என்ற பக்தர், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அவரது குழுவினருடன் வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்த வெங்கட் மற்றும் அவரது குழுவினர் 3 கிலோ 800 கிராம் எடையுள்ள வெள்ளி குடையுடன் திருப்போரூர் மாட வீதி வலம் வந்து முருகன் கோயிலுக்கு, வெள்ளிக் குடையினை காணிக்கையாக கோயில் நிர்வாகத்தினரிடம் நேற்று மாலை வழங்கினர். பின்னர், அபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்த, வெள்ளி குடையின் மதிப்பு ₹4 லட்சத்து 4 ஆயிரம் என தெரிவித்தனர்.

The post திருப்போரூர் முருகன் கோயிலுக்கு ₹4 லட்சம் வெள்ளி குடை காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruporur Murugan Temple ,Tiruporur ,Chennai ,Kandasamy ,temple ,Tirupporur ,
× RELATED திருப்போரூர் நகரப்பகுதியில் பழுதான...