×

செல்போன், பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது

செங்கல்பட்டு, செப்.4: மறைமலைநகர் அருகே கூடலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் கிஷோர் (21). சென்னை பெருங்களத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மீண்டும் மறைமலைநகர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, அவரை வழிமறித்த 4 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கிஷோரிடமிருந்த செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இது குறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் கிஷோர், புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், வழக்குபதிவு செய்த போலீசார், வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், மறைமலைநகர் அருகே பேரமனூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (24) மற்றும் 17வயதுடைய 3 சிறுவர்கள் என்பதும், இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, 4 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவர்களை நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செல்போன், பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Vijayaraghavan ,Kudalur ,Kiramalainanagar ,Kishore ,Perungalathur ,Chennai ,Karamalai Nagar ,
× RELATED அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு