×

சிறந்த சமூக சேவை செய்ததற்காக கருப்படிதட்டடை ஊராட்சி மன்ற தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

காஞ்சிபுரம், செப்.4: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னா (எ) வெங்கடேசனுக்கு, சிறந்த சமூக சேவை செய்ததற்காக, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆசிய சர்வதேச கலாச்சார ஆராய்ச்சி பல்கலைக்கழகம், சர்வதேச அகடாமி, ஆசிய இன்டர்நேஷனல் கலாச்சார அகடாமி, இந்திய தர மேலாண்மை அமைப்புகள் சார்பில், ஓசூரில் கவுரவ பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆந்திர மாநிலம், ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஹரிதாஸ் தலைமை தாங்கி, சமூக மற்றும் சமூக சேவை செய்தவர்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய கருப்படிதட்டடை ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பிரமுகருமான பொன்னா (எ) வெங்கடேசனுக்கு, சிறந்த சமூகசேவை செய்ததற்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில், கர்நாடக மாநில சவுத் இந்தியா கலைஞர் டாக்டர் ரஜினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சிறந்த சமூக சேவை செய்ததற்காக கருப்படிதட்டடை ஊராட்சி மன்ற தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,President ,Kanchipuram ,Kanchipuram Panchayat Union ,Panchayat ,Ponna (A) Venkatesan ,Asian International Cultural Research University ,International Academy ,Asian International Cultural… ,Dinakaran ,
× RELATED தொடுகாடு ஊராட்சி தலைவர் தகுதி...