×

மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம்,செப்.7: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களுக்கான முதல் கலந்துரையாடல் கூட்டம், வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று (8.9.2024) காலை 9 மணியளவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘எம்.எம்.லெகசி’ ஓட்டலில் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி.ராதாகிருஷ்ணன் தலைமையேற்கின்றார். மண்டலப் பொறுப்பாளரும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளருமான வே.கௌதமன் வரவேற்புரையாற்றுகின்றார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மாவட்ட கழக துணை செயலாளர் சிறுவேடல் க.செல்வம் எம்பி, மாணவரணிச் செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, காஞ்சி மாநகர மேயர் எம்.மகாலட்சுமியுவராஜ், மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன்,

காஞ்சி தெற்கு மாவட்டபொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சுகுமார், பாபு, குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சிகாமணி, வாலாஜாபாத் ஒன்றிய குழுத் தலைவர் தேவேந்திரன், மாநகர அவை தலைவர் செங்குட்டுவன், மாநகரப் பொருளாளர் சுப்பராயன், மாநகர துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வன், ஜெகன்நாதன், நிர்மலா, எம்.சி. அணியின் மாநில துணைச் செயலாளர்கள் பார்த்திபன், பைந்தமிழ் பாரி, நம்பி, வாசிம் ராஜா, நிவேதா ஜெசிகா,கோபால்ராம், கார்த்திக், சுரேஷ், மனோகரன், காஞ்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் சாரதி பெரியநாயகம் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன், எம்பி தெரிவித்துள்ளார்.

The post மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,DMK Sports Development Team ,MM Legacy ,Bengaluru-Chennai Highway, Kanchipuram South District ,Dinakaran ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு