×

காஞ்சிபுரத்தில் 307 பொது இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதி

 

காஞ்சிபுரம், செப். 7: காஞ்சிபுரத்தில் 307 பொது இடங்களில் போலீசார் சிலை வைக்க அனுமதி வழங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல், இன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்திக்கு, அரசின் வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சிலை அமைக்க காஞ்சிபுரம் உட்கோட்டாட்சியர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டாட்சியரிடம் 307 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை, பரிசீலனை செய்து மனுக்களில் கோரிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் 307 பொது இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Angange Vinayagar ,Vinayagar Chaturthi ,Kanchipuram district ,Vinayagar ,Kanjipura ,
× RELATED காஞ்சிபுரம் அருகே...