×

டூவீலர் மோதியதில் போலீஸ்காரர் காயம்

சேலம், ஜூலை 27: சேலம் மாவட்டம், நங்கவள்ளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(30). இவர் சேலம் ஆட்டையாம்பட்டி ஸ்டேசனில் போலீசாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பணியை முடித்துவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஓமலூரில் இருந்து தாரமங்கலம் வழியாக சென்ற போது, எதிரே வந்த இன்னொரு டூவீலர், மணிவண்ணன் டூவீலர் மீது மோதியது. இதில் போலீஸ்காரர் மணிவண்ணனும், எதிர்புறம் வண்டியில் வந்தவரும் காயம் அடைந்தனர். போலீஸ்காரர் மணிவண்ணன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மோதியதில் போலீஸ்காரர் காயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Manivannan ,Nangavalli Ambedkar ,Salem district ,Salem Attaiyambatti station ,Omalur ,Dharamangalam… ,Dinakaran ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்