- ஹாலியா தாலுக்கா
- உத்தரகண்ட் மாவட்டம்
- சதீஷ் நாராயண் ஹலடனக்
- ஷைலா சந்துரு கும்பர்
- ஷிவ்பூர்
- முர்கவாடா
- தின மலர்
உத்தரகன்னடா மாவட்டம், ஹாலியா தாலுகாவில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் முர்கவாடா கிராமத்தில் சதீஷ் நாராயண் ஹலடனக், ஷிவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷைலா சந்துரு கும்பர் ஆகியோரின் வீடுகளின் சுவர் சேதமடைந்தது. அந்த வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து செய்தனர். தாலுகாவில் இதுவரை 94.66 செமீ மழையும், நேற்று முன்தினம் 19.2 மிமீ மழையும் பெய்துள்ளது.
தாலுகாவில் ஏற்கனவே விளையும் தோட்டக்கலை பயிர்களான மா, தென்னை, பாக்கு, வாழை மற்றும் புதிதாக பயிரிடப்பட்ட டிராகன் பழ பயிர்கள் நன்றாக உள்ளன. ஆனால் மீண்டும் தொடர் மழை பெய்தால் இந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைய வாய்ப்புள்ளது. மா பயிருக்கு இன்சூரன்ஸ் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு ஜூலை 31 கடைசி நாளாகும். இது குறித்து தோட்டக்கலை துறையை தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை மூத்த இயக்குனர் ஏ.ஆர்.ஹேரியா தெரிவித்தார். தாலுக்காவில் நெல், மாட்டுச் சோளம், கரும்பு ஆகிய பயிர்கள் நன்றாக உள்ளன.
The post தொடர் மழையால் 64 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.