×

வீடு கட்டுவதாக கூறி கடன் வாங்கி இளம்பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி: கான்ஸ்டபிள் கைது

உத்தரகன்னடா: வீடு கட்டுவதற்கு பணம் தேவை என கூறி, இளம்பெண்ணிடம் ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்த கான்ஸ்டபிளை, போலீசார் கைது செய்தனர். உத்தரகன்னடா மாவட்டம், ஹாசன் மாவட்டம், சன்னராயப்பட்டணா தாலுகாவை சேர்ந்த கிரிஷா. உத்தரகன்னடா மாவட்டம், முண்டுகோடு தாலுகாவில் உள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்க்கிறார். இவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன், கிரிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவர், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு பணம் கடனாக கேட்டுள்ளார். இதையடுத்து அவர், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் வாங்கியுள்ளார். அதற்கு பதில் காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை திரும்ப தரவில்லை. இதுபற்றி பலமுறை கேட்டபோதும், அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் இளம்பெண், கிரிஷா பணத்தை மோசடி செய்ய இருப்பதை தெரிந்து கொண்டார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிஷாவை கைது செய்தனர்.

The post வீடு கட்டுவதாக கூறி கடன் வாங்கி இளம்பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி: கான்ஸ்டபிள் கைது appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Krisha ,Channarayapatna Taluk, Hassan District, Uttarakhand District ,Mundugodu taluka, Uttarakhand district ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட்டில் மெஹந்தி விழாவின்போது மணப்பெண் உயிரிழப்பு..!!