- திருவாடானை
- பெரியநாயகி அம்மன்
- கருபணா
- சுவாமி
- கோவில்
- பெரியகிராமங்கலம்
- இக்கோயில்
- 13வது ஆண்டு ஆமை திருவிழா
- திருவுலகு
திருவாடானை, ஜூலை 26: திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் மற்றும் கருப்பண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் 13ம் ஆண்டு பூக்குழி உற்சவ திருவிழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொது அமைதி வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் 208 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக கோயில் மூலவருக்கு பால், பழங்கள், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மன் மற்றும் கருப்பண சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post பொது அமைதி வேண்டி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.