×
Saravana Stores

இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை, நவ.17: காரைக்குடி அருகே கீழையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாத்தையா(49). டுவீலர் மெக்கானிக். இவருடைய நண்பர் கொரட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன்(40). இருவரும் போலீசாக பணியில் இருப்பதாக பொய் கூறி கடந்த 16.3.2015 அன்று 23வயது பெண்ணை கடத்திச் சென்று காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை பகுதியில் உள்ள முந்திரி காட்டில் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் மேலும் பல பெண்களை இதுபோல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு சிவகங்கை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயநிர்மலா ஆஜரானார். வழக்கை விசரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட சாத்தையா, அர்ஜுனன் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sathya ,Keezhiyapatti ,Karaikudi ,Arjunan ,Korati ,
× RELATED புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை