×
Saravana Stores

மழையால் தட்டான் பூச்சிகள் அதிகரிப்பு

காங்கயம், நவ.17: மழைக்காலம் ஆரம்பித்த உடனேயே நம் கண்களில் தென்படும் பூச்சிகள் தட்டான் பூச்சியும், ஈசலும் தான். தட்டான் பூச்சிகள் பொதுவாக நீர் நிலைகளின் அருகிலும் திறந்த வெளியிலும் சுற்றித்திரிபவை ஆகும். இவற்றின் இறக்கையில் பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் ஒளி ஊடுருவும் தன்மையுடன் அமைந்துள்ளன. பல்வேறு காரணங்களால் குறைந்த அளவில் காணப்படும் இந்த பூச்சிகள் மழை காலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.

தற்போது மழை பெய்து வருவதால் இவைகள் எண்ணிக்கை அதிகரித்து வானத்தில் கூட்டம் கூட்டமாக வட்டமடித்து வருகிறது. இயற்கையிலேயே காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளை அடையாளம் கண்டு பல்கி பெருகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயிரில் பாதிப்பை உண்டாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.

The post மழையால் தட்டான் பூச்சிகள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED பெருமாநல்லூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலம்