×
Saravana Stores

சேமிப்பு திட்டத்தில் சேர நவ.30 வரை சிறப்பு முகாம்

சிவகங்கை, நவ.17: அஞ்சலகங்களில் செல்வ மகன், செல்வ மகள் சேமிப்பு திட்டங்களில் சேர நவ.30வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அஞ்சல் துறை சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் செல்வ மகள் மற்றும் செல்வ மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் நவ.30ம் தேதி வரை நடைபெறும். 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இத்திட்டங்களில் சேரலாம். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.250 செலுத்தியும், செல்வ மகன் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.500 செலுத்தியும் கணக்குகள் தொடங்கலாம். மேலும் இம்முகாம்களில் அனைத்து வகையான அஞ்சலக கணக்குகளும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சேமிப்பு திட்டத்தில் சேர நவ.30 வரை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Selva Magan ,Selva ,Dati ,Superintendent ,Sivagangai Postal Division ,Mariyappan ,Children's Day ,
× RELATED புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை