×

செங்கல்பட்டு புறவழி சாலையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டு புறவழி சாலையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர். செங்கல்பட்டு புறவழி சாலையில் சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படும்.

தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. இத்தகைய வாகன போக்குவரத்து மிகுந்த சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அதிகளவிலான பாரத்தை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தென்னை மர ஓலைகளை ஏற்றி வரும் லாரிகள் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் அதிக பாரம் ஏற்றி வருகின்றனர்.

இதனால், முந்தி செல்லும் வாகனங்கள் அருகே அதிக பாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படுகிறது. சாலையின் முன்னே செல்லும் வாகனங்கள் காண முடியாதபடி, சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டு செல்லப்படுவதால் சாலை வளைவுகள் தெரியாத நிலையில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

The post செங்கல்பட்டு புறவழி சாலையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,Dinakaran ,
× RELATED பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை...