×

செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே வேதாசலம் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். செங்கல்பட்டு நகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகனங்கள் பயன்பாடு காரணமாக காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் குறித்த நேரத்திற்கு வேலைக்கு சென்று சேர முடியாத நிலையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் செங்கல்பட்டு நகரின் பிரதான சாலைகளில் 24 மணிநேரம் வாகன போக்குவரத்து உள்ளதால் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும்.இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

அடிக்கடி ஏற்படும் நெரிசல் காரணமாக அவசர உதவிக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் எளிதில் சென்று வர முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வேதாசலம் நகரில் இயக்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும், என்று பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றி வேறு இடத்திற்கும் மாற்றம் செய்ய செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Chengalpattu ,Vedachalam ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி