சோமனூர், ஜூலை 20: சோமனூர் அடுத்த வாகராயம்பாளையத்தில் உள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மின்மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாகராயபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக சுடுகாடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மோப்பிரிபாளையம் பேரூராட்சி சார்பில் மின் மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் மின் மயானம் அமைய உள்ள இடத்திலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரை பேரணியாக நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் சசிகுமாரிடம் மனு அளித்தனர். மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மின்மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.
The post மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.