திருப்பூர்: திருப்பூர் அருகே அதானி கேஸ் பைப் லைன் வெடித்து பெண்ணுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டோட்டல் கேஸ் பைப் லைன் மூலம் இயற்கை எரிவாயு திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கேஸ் பைப் லைன்கள் இணைக்கப்படும் பகுதியில் பிரெஷர் பாண்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் நேற்று ஏற்பட்ட விபத்து காரணமாக கேஸ் பைப் உபகரணம் பறந்து சென்று சுந்தராம்பாள் என்பவரின் கால் மீது விழுந்தது. கால் எலும்பில் முறிவு ஏற்பட்ட சுந்தராம்பாலை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் கேஸ் பைப் லைன்களை சுற்றி முறையாக பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்பூர் அருகே அதானி கேஸ் பைப் லைன் வெடித்து பெண்ணுக்கு கால் எலும்பு முறிவு: பைப் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியீடு appeared first on Dinakaran.