×

வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், ஜூலை 18: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2024ம் ஆண்டுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (19ம்தேதி) நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், 044-2723 7124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.

The post வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District Employment and Vocational Guidance Center ,Kanchipuram District Employment Office ,Dinakaran ,
× RELATED பரந்தூர் விமான நிலைய நிலம் எடுப்பு...