×

மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்

 

ஊட்டி, ஜூலை 17: பாலகொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள தங்காடு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. தங்காடு சமுதாய கூடத்தில் நடந்த முகாமில், பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசி வரவேற்றார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் சரவணகுமார் தலைமை வகித்தார்.வட்டார அலுவலர் அண்ணாதுரை, கிராம நிர்வாக அலுவலர் கவுசிக், பாலகொலா ஊராட்சி மன்ற கவுன்சிலர் ராஜேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில், பாலகொலா ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பல்வேறு அரசு துறைகளிடம் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட அரசு அதிகாரிகள், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும், என தெரிவித்தனர். இந்த சிறப்பு முகாமில், ஊர் தலைவர் அமர்நாத், கவுன்சிலர் ராஜன், சிவன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tangadu ,Balakola ,Uratchi ,Project ,Nilgiri district ,Program ,Camp ,Dinakaran ,
× RELATED நகர திமுக சார்பில் இன்று பொது உறுப்பினர்கள் கூட்டம்