×

ஹூமா குரேஷியின் திருமண தகவல்

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ரஜினிகாந்துடன் ‘காலா’, அஜித் குமாருடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், மற்ற மொழிகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். இந்நிலையில், அவரது திருமணத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு மிகவும் பொருத்தமான நபருக்கு காத்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்தால், அவர் எனக்கு மிகச்சரியானவர் என்று மனதிற்கு தோன்றினால், உடனே அவரை திருமணம் செய்துகொள்வேன்.

பாலிவுட்டில் நடிப்பவர்கள் தொடர்ந்து திருமணம் செய்து வருவதால், நானும் அதுபோல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ. தினமும் என் திருமணம் குறித்த கேள்வியை எதிர்கொள்கிறேன். திருமணத்துக்கு நான் அவசரப்படவில்லை. என் வாழ்க்கையின் சில விஷயங்களையாவது தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறேன்’ என்றார்.

The post ஹூமா குரேஷியின் திருமண தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Huma Kureshi ,Bollywood ,Rajinikanth ,Ajit Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்