×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு: கொட்டும் மழையில் விரட்டியடிப்பு

செங்கல்பட்டு, ஜூலை 7: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமான நிலையில் தனது மகளுடன் தற்போது பொத்தேரி பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்ட குமுதவள்ளி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குமுதவள்ளி, நடக்க முடியாத நிலையில் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாகக் கூறி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் சிலர் துடைப்பத்தால் அடித்தும் ஒருமையில் அவதூறாகப் பேசியும் மருத்துவமனையில் இருந்து அவரை வெளியேற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதவள்ளி கொட்டும் மழையில் நனைந்தபடி மருத்துவமனை வளாகத்திலே படுத்துக் கிடந்தார். அப்போது, அவ்வழியே சென்ற பொதுமக்களிடம், நோயாளியான என்னை பராமரிக்க உதவியாளர் இல்லை என்று கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டனர். ஆதரவற்ற நிலையில் நோய் பாதித்த பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு: கொட்டும் மழையில் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Government Hospital ,Chengalpattu ,Kumudawalli ,Tambaram ,Chengalpattu District ,Botheri ,Dinakaran ,
× RELATED பொத்தேரியில் நடந்த கஞ்சா வேட்டையில்...