×
Saravana Stores

வரும் 8ம் தேதி முதல் இந்திய விமானப்படை தேர்விற்கு விண்ணபிக்கலாம்

 

கோவை, ஜூலை 5: அக்னி வீர் வாயு இந்தியா விமானப்படை தேர்விற்கு விண்ணப்பிக்கிறவர்கள் வரும் 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இனையதளம் வாயிலாக அக்டோபர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் வரும் 8ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்களாம்.

விண்ணப்பிக்கிறவர்கள் 12ம் வகுப்பு, பட்டயபடிப்பு அல்லது தொழிற்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும், 2004 ஜூலை 3ம் தேதியில் இருந்து 2007 ஜனவரி 3ம் தேதிக்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதிகளை கொண்ட ஆண், பெண் இருபாலரும் இத்தேர்விற்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரும் 8ம் தேதி முதல் இந்திய விமானப்படை தேர்விற்கு விண்ணபிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Coimbatore ,Krantikumar Badi ,Indian ,Indian Air ,Force ,Dinakaran ,
× RELATED ராணுவ கேப்டன், கணவர் தற்கொலை