×

சோர் நிகல் கே பாகா (இந்தி) –ஓடிடி விமர்சனம்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள நேரடி இந்தி படம். இது ஒரு விமான கடத்தல் கதைதான். ஆனால் மற்ற விமான கடத்தல் கதையிலிருந்து மாறுபட்ட படம். யாமி கவுதம் ஒரு விமான பணிப்பெண். ஜாலியாக செல்கிற அவரோட வாழ்க்கையில குறுக்கே வருகிறார் சன்னி கவுசல். விமான பயணியாக அறிமுகமாகி அப்புறம் யாமியை விரட்டி விரட்டி காதலித்து, அவர் மனதில் இடம்பிடித்து கல்யாணத்துக்கு முன்னாடியே யாமியை அம்மாவாகவும் ஆக்கிவிடுகிறார். திடீரென்று ஒரு நாள், ‘எனக்கு 20 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. என்னை வில்லன்கள் துரத்துறாங்க. விமானத்துல கடத்த இருக்கிற பல கோடி மதிப்புள்ள வைரத்தை திருடி வேறொருத்தங்ககிட்ட கொடுத்துட்டா போதும் என்னோட பிரச்சினை தீர்ந்திடும்’ என்கிறார் சன்னி கவுசல்.
அதன்பிறகுதான் இதெல்லாமே சன்னி கவுசல் போட்ட காதல் நாடகம் என்று யாமிக்கு புரிகிறது.

வைரத்தை கடத்த தன்னை பயன்படுத்தத்தான் இந்த காதல் நாடகம் என்று அவருக்கு தெரியவருகிறது. தன்னை ஏமாற்றிய சன்னி கவுசலை பழிவாங்க அவனது கடத்தலுக்கு உதவுவது போன்று நடித்து, இவர் ஒரு திட்டம் போடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. யாமி கவுதமும், சன்னி கவுசலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நிமிடத்துக்கு நிமிடம் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்போடு படத்தை இயக்கி இருக்கிறார் அஜய் சிங். படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. சன்னி கவுசலை பழிவாங்க யாமி போடும் திட்டத்தில் கொஞ்சம் லாஜிக் மிஸ்சிங். விமான கடத்தல்னாலே அது இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்கிற டெம்ப்ளேட் இதுலேயும் இருக்கு. இந்த குறைகளை ஒதுக்கி வைத்துவிட்டால் 110 நிமிடம் ராக்கெட் வேகத்துல பறக்கும். தமிழிலும் பார்க்கலாம்.

The post சோர் நிகல் கே பாகா (இந்தி) – ஓடிடி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Netflix ,Yami Gautam ,OTD ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’