×
Saravana Stores

ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நேற்று நடந்த போக்குவரத்து மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவாடனை ராம கருமாணிக்கம் (காங்கிரஸ்) பேசும்போது, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத்திட்டம் கொண்டு வரப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் ஆண்களை மட்டும் ஏன் புறந்தள்ள வேண்டும். எனவே ஆண்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மற்றும் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டம். எனவே இங்கு இழப்பீட்டுத் தொகையை அதிகமாக வழங்க வேண்டும். சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். கடலூர் அய்யப்பன் (திமுக) பேசும்போது, ‘‘கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான கட்டிடம். தற்போது கலெக்டர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் பழைய கலெக்டர் அலுவலகத்தை பழமை மாறாமல் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கடலூர் மாவட்டம் மழை மற்றும் புயலால் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

* பேரவையை நடத்திய மாற்றுத்தலைவர்கள்
சட்டப்பேரவை நிகழ்வுகளை சபாநாயகர் அப்பாவு நடத்துவார். அவர் இல்லாத நேரத்தில் அவையை துணை சபாநாயகர் பிச்சாண்டி நடத்துவார். அவரும் இல்லாத நேரத்தில் மாற்று தலைவர்கள் அவையை நடத்துவது வழக்கம். நேற்று மாலை நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளை முதலில் சபாநாயகர் அப்பாவும், அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பிச்சாண்டியும் நடத்தினர். பின்னர் சிறிது நேர இடைவெளிகளில் மாற்றுத் தலைவர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் (திமுக), துரை சந்திரசேகர் (திமுக) ஆகியோரும் அவையை வழிநடத்தினர்.

The post ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Congress ,Thiruvadani Rama Karumanikam ,
× RELATED மழைக்கால தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஜி.கே.வாசன் கோரிக்கை