×

2 வாலிபர்கள் குண்டாசில் சிறையிலடைப்பு

 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். வந்தவாசி தாலுகா, சோரப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (20), குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முகமது அஸ்வாக் (21) ஆகிய 2 பேர் மீது, ஒரகடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் வழிப்பறி வழக்கு ஒன்றில் 2 பேரையும், ஒரகடம் போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்விமோகன் மேற்கண்ட 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்காக ஆணையினை வேலூர் மத்திய சிறை அதிகரிகளிடம் வழங்கி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

The post 2 வாலிபர்கள் குண்டாசில் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Sriperumbudur ,Rahul ,Soraputtur ,Vandavasi taluk ,Nandambakkam ,Kunrattur ,Rajiv Gandhi Nagar ,Kundasil ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து...